Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
ஊத்துமலை அருகே மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், ஊத்துமலை அருகே கருவந்தா உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லக்காளை மகன் சுரேஷ் (42). கொத்தனார் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் கீழ சுரண்டையைச் சேர்ந்த குத்தாலிங்கம் மகள் சிவனம்மாள் என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு மதுமிதா (9), கனிஷ்கா (4), என்ற இரண்டு மகள்களும் கதிர்வேலன் (6) என்ற மகனும்...
நேற்று அதிகாலை செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே புல்லட் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் காவல் உதவி ஆய்வாளர் உட்பட இரண்டு பெண் காவலர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவர்கள் இருவரும் வழக்கு நிமித்தமாக சென்றதாக கூறப்பட்டது. மதுராந்தகம் அடுத்த சிறுநாகலூர் பகுதியில் இன்று காலை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த புல்லட் வாகனத்தின் மீது,
பின்னால் வந்த கார் மோதியதில் சென்னை மாதவரம் பால் பண்ணை காவல்...
இப்படி எல்லாம் கூட இறப்பு நேரிடுமா என்கிற அதிர்ச்சியிலும் சோகத்திலும் உறைந்திருக்கிறார்கள் பெற்றோர்கள்.
சூயிங் கம் சாக்லேட் சாப்பிட்ட 4 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழை இழந்திருப்பது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் 4 வயது குழந்தை பபிள்கம் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, பபிள்கம் குழந்தையின் தொண்டையில் சிக்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுவாசிக்க முடியாமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் நவம்பர்...
கர்நாடகா மாநிலம் பெங்களூரு பகுதியில் வசித்து வருபவர் 32 வயது சபரீஷ். இவர், தனது நண்பர்களுடன் அக்டோபர் 31ம் தேதி தீபாவளியை மதுபோதையில் கொண்டாடி உள்ளார்.
அப்போது சக்தி வாய்ந்த பட்டாசு மீது வெடிக்கும்வரை யார் அமர்ந்து இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆட்டோ ரிக்சா வாங்கி தருவதாக சபரீஷீன் நண்பர்கள் பந்தயம் கட்டியுள்ளனர். வேலைக்கு செல்ல தேவையில்லை.
இலவசமாகவே ஆட்டோ ரிக்சா கிடைத்தால் அதை வைத்து பிழைப்பை ஓட்டி விடலாம் என மனக்கணக்கு...
அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி அடித்து கொல்லப்பட்ட விவகாரத்தில், தம்பதி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், வீட்டு வேலைகளை ஒழுங்காக செய்யச் சொல்லி சிறுமியின் உடம்பில் அயன்பாக்ஸ், சிகரெட் சூடுவைத்து, அடித்து சித்ரவதை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அமைந்தகரை மேத்தா நகர், சதாசிவ மேத்தா தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நிஷாத் (35). இவர், பழைய கார்களை வாங்கி...
குமரி கல்லூரி மாணவி ஷரோனுக்கு அவரது காதலி கிரீஷ்மா மூலம் பாராகுவாட் விஷம் கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
பாறசாலையைச் சேர்ந்தவர் ஷரோன் (23) இவர் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இவரது காதலி ராமவர்மன்சிரை, களியக்காவிளையைச் சேர்ந்த கிரீஷ்மா.
இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜூஸில் விஷம் கலந்து ஷரோனை கொன்றார். இதுகுறித்து திருவாடானை குற்றப்பிரிவு போலீஸார்...
‘எங்களைப் பார்க்காம இருக்க மாட்டான்’ மகன் இறந்த துக்கத்தில் கணவன் – மனைவி எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
“அவன் எங்களைப் பார்க்காம இருக்க மாட்டான்...” என்று மகன் இறந்த துக்கத்தில் இருந்து வந்த தம்பதியர் விஷம் குடித்து விடுதி அறையில் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வசித்து வருபவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி வத்சலா. இந்த தம்பதியருக்கு 7 வயதில் சுரேஷ் என்கிற மகன் இருந்த நிலையில்,
கடந்த மார்ச் மாதம் திடீரென்று சுரேஷூக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வைரஸ் காய்ச்சலுக்கு...
அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்த சிறுமி மர்ம மரணம் : குளியல் அறையில் சடலம் மீட்பு : உரிமையாளரிடம் கிடுக்கிப்பிடி!!
Tamil 360 Admin - 0
அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்த 16 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்ததால் உரிமையாளரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.
சென்னை அமைந்தகரை சதாசிவ மேத்தா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் ஹர்ஷத் என்பவரின் வீட்டில் கடந்த ஒருவருடமாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டு வேலைகள் செய்துள்ளார்.
நேற்று மதியம் குளிக்க சென்ற சிறுமி வெளியே...
தூத்துக்குடி மாவட்டத்தில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி, திருச்செந்தூர் ரோடு மேம்பாலம் அருகில் வசிப்பவர் மூக்காண்டி மகன் ஆறுமுகம்.
ஆட்டோ டிரைவரான இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு குடும்பத் தகராறு ஏற்பட்ட நிலையில், இவரது மனைவி ஆறுமுகத்தை விட்டுப் பிரிந்து சென்று...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கணினி மின் பொறியாளராக பணிபுரிந்து வந்த ரோஷினி எனும் இளம்பெண், வீட்டில் மின் மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பட்டறை தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். இவரது மனைவி ரோஷினி (29). இவர் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிகிறார்.
தற்போது வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் வீட்டிலிருந்தவாறே ஆன்லைன்...
















