Friday, July 3, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
பெங்களூரில் அதிகம் சாப்பிடாதே என பேரனை சூடு வைத்து கொடுமைப்படுத்திய பாட்டி மற்றும் சித்தியை போலீஸார் கைது செய்தனர். பெங்களூருவில் உள்ள குருனப்பல்பாலையா என்ற பகுதியை சேர்ந்தவர் இம்ரான்பாஷா. கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஆதிரா. இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளன. இந்த 5 குழந்தைகளில் 4ஆவது குழந்தை அர்மான் ஷெரீப் (2). இந்த குழந்தைக்கு இயல்பாகவே அதிக உணவு உண்ணும் பழக்கம் உள்ளது. இதனால் தினமும் இவரது பாட்டி முபீனா...
கேரட் குடும்பத்தை சேர்ந்த மற்றொரு காய் அதைவிட நமக்கு பல நன்மைகளை வழங்கக்கூடும் என்பது நாம் அறியாத ஒரு தகவல். மழைக்காலங்களில் அதிகமாக கிடைக்கும் காய்கறிகளில் ஒன்று கருப்பு கேரட். இதனை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பெயர் சொல்லி அழைக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதனை மங்கள் முள்ளங்கி என்று அழைக்கிறார்கள். இந்த கருப்பு கேரட்டின் நன்மைகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம் நிறமூட்டிய உதவும் கருப்பு கேரட் செயற்கை நிறமூட்டிகளை விட இவை சிறப்பான நிறத்தை கொடுக்கும்....
தெலுங்கானா..................... தெலுங்கானாவில் திருமணத்துக்கு வந்த மணப்பெண்ணின் காதலன் மாப்பிள்ளை கண்முன்னே முத்தம் கொடுத்ததால் பரபரப்பானது. கரீம் நகர் மாவட்டத்தின் ஹுஸுராபாத்தை சேர்ந்த நபருக்கும், அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் ஜோராக நடந்து கொண்டிருந்த நிலையில் மணமகளை மணமேடைக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது குடிபோதையில் வந்த நபர் ஒருவர், மணப்பெண்ணின் பக்கத்தில் வந்ததுடன், “நாங்கள் இருவரும் காதலிக்கிறோம்” என்று கூறியபடியே முத்தம் கொடுத்துள்ளார். இதனால் மாப்பிள்ளை உட்பட அனைவரும் அதிர்ச்சியில்...
தமிழகத்தில் டிக்டாக் மூலம் மனைவி இரண்டு பேருடன் நெருங்கிய பழகியதால், வேதனையடைந்த கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பொம்மநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருக்கு கனகவள்ளி என்ற மனைவி உள்ளார். கனகவள்ளி பொழுது போக்கிற்காக ஆரம்பத்தில் டிக் டாக்கை பயன்படுத்தி வந்துள்ளார். அதன் பின்னர் அதிலே மூழ்கி போயுள்ளார். அதன் மூலம் டிக் டாக்கில் நண்பர்கள் பலர் கனகவள்ளிக்கு கிடைத்துள்ளனர். அப்படி தான்...
14 வயது மகனுக்கு வந்த பார்சல்... பெங்களூருவில் தன்னுடைய மகனுக்கு வந்த பார்சலில் கஞ்சா இருப்பதை பார்த்த தந்தை பொலிசில் புகாரளித்துள்ளார். பெங்களூரூவில் உள்ள சதாசிவ நகரை சேர்ந்த 45 வயது தொழிலதிபர் ஒருவருக்கு 9வது படிக்கும் மகன் ஒருவர் உள்ளார். சம்பவ தினத்தன்று மகனுடைய பெயருக்கு கொரியரில் பார்சல் ஒன்று வந்துள்ளது. மகன் அந்நேரம் வீட்டில் இல்லாததால் பார்சலை திறந்து பார்த்துள்ளார், அதில் அடர்பழுப்பு நிறத்தில் பொடி ஒன்று இருந்துள்ளது. அது...
கொரோனாவை அழிக்கும் புகையிலை இலை.. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய கொரோனா தடுப்பூசிகளின் பரிசோதனைகள் குரங்குகள் மீது வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்தின் சுலலாங்கொர்ன் பல்கலைக்கழகத்தின் முன்னணி தொற்று நோய் மருத்துவர் அறிவித்துள்ளார். வைரஸ் டி.என்.ஏ-வை புகையிலை இலைகளில் ஒருங்கிணைப்பதன் மூலம் சமீபத்திய தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது என்று தாய் செஞ்சிலுவை சங்கத்தின் வளர்ந்து வரும் தொற்று நோய் சுகாதார அறிவியல் மையத்தின் தலைவர் டாக்டர் திருவத் ஹேமசுதா தெரிவித்தார். இந்த இலை டி.என்.ஏ-வுடன் எதிர்வினையாற்றுகிறது மற்றும்...
வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி... இந்தியாவில் மாந்திரீகம், மந்திர தந்திரங்கள் கற்று கொண்டிருந்த அமெரிக்க பெண் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் Cynthia Mitchell. இவர் கடந்தாண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசிக்கு வந்தார். அங்குள்ள மலைப்பகுதியில் தங்கி மாந்தீரீகம், சூனியம் போன்ற விடயங்களை கற்று வந்திருக்கிறார் Cynthia Mitchell. அவருக்கு அதன் மீது அதீத ஆர்வம் இருந்த...
வலுக்கட்டாயமாக மொட்டை போட்ட பிக்பாஸ் பிரபலத்தின் மனைவி.... வீட்டு வேலைக்கு வர மறுத்த தாழ்த்தப்பட்ட இளைஞனை கடுமையாக தாக்கியதுடன், அவருக்கு வலுக்கட்டாயமாக மொட்டை போட்டு விட்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலாசாவை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் ஸ்ரீகாந்த். இவர், குடும்ப வறுமை காரணமாக சொந்த ஊரில் இருந்து விசாகப்பட்டினம் மாவட்டம் பெண்டுர்த்தி மண்டலம் கிரிபிரசாத் நகருக்கு வந்து வீடு...
பாரதிராஜா... தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தேர்தல் நடத்தியே நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் பாரதிராஜா உறுதியாக இருந்தார். அந்த தேர்தலுக்கு கே.விஜயகுமார் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 2017 – 2019 ஆம்...
கேம்.......... கொரோனா ஊரடங்கால், மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சமீப நாட்களாக செல்போன், தொலைக்காட்சி ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால், இளைஞர்களும், சிறுவர்களும் வெகுவாக பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த சில கிராமங்களில் செல்போன் கேம் விளையாடுவது, தொலைக்காட்சி பார்ப்பது உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள அத்வைத் நகர்,...