Friday, July 3, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
பிரித்தானியாவில் கடுமையான ஆட்டிசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தையை சமாளிக்க இயலாமல் அதன் தாயே கொலை செய்த விவகாரத்தில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகத்து மாதம் 16ஆம் திகதி, மேற்கு லண்டனிலுள்ள ஆக்டன் என்ற பகுதியில் ஒரு பெண் பொலிஸ் நிலையம் சென்று கொடுத்த தகவலின்பேரில் வீடு ஒன்றிற்கு விரைந்த பொலிசார் அந்த வீட்டில் 10 வயது சிறுவன் ஒருவன் இறந்து கிடந்ததைக் கண்டதாக செய்திகள் வெளியாகின. அந்த சம்பவத்தில்...
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு வீண் பிரச்சினைகள் தேடி வரும். செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்பட்டு மனகுழப்பத்துடன் இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். அமைதி நன்மை தரும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி...
தாவூத் இப்ராஹிம் தற்போது ஒரு பாகிஸ்தான் நடிகையுடன் தொடர்பில் உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் மும்பையில் கடந்த 1993-ஆம் ஆண்டு நடந்த குண்வெடிப்பு சம்பவங்கள் போன்று, பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. அதன்பேரில் பாகிஸ்தானிடம் தகவல்கள் வழங்கியும், அந்த நாடு தாவூத் இப்ராகிமை இந்தியாவிடம்...
தமிழகத்தில் தங்கியிருந்த இலங்கை தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளி குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா கோயமுத்தூரில், பிரதீப் சிங் என்ற பெயரில், கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் வசித்து வந்தார். கடந்த ஜுலை மாதம் 4-ஆம் திகதி இவர் உயிரிழந்த நிலையில், மதுரையில் உடல் தகனம் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில் இலங்கையை சேர்ந்த அம்மானி தான்ஜி, மதுரையைச்...
தமிழகத்தில் 2 மகன்களுக்கு எலி மருந்து கொடுத்துவிட்டு, தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (58). இவர் சென்னை, ஊரப்பாக்கம் அடுத்த காரணைபுதுச்சேரி கோகுலம் காலனி அர்ஜுன் தெருவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாடகை வீட்டில் குடியேறினார். அதன் பின் அப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கு சுமதி(45) என்ற மனைவியும், சிவக்குமார்(10) மற்றும் சரண்குமார்(8) என இரண்டு மகன்கள்...
இந்தியவின் கேரள மாநிலத்தில் 14 வயது சிறுமியை கூட்டு வன்கொடுமைக்கு இரையாக்கிய வழக்கில் மூவர் கைதாகியுள்ளனர். கேரள மாநிலம் கொச்சியில் பாடசாலை மாணவி ஒருவர் அடிக்கடி சோர்வுடனே காணப்பட்ட நிலையில், ஆசிரியர்கள் மாணவியுடன் தனிப்பட்ட ஆலோசனை வழங்குதல் அமர்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். உரிய நிபுணருடன் முன்னெடுக்கப்பட்ட இந்த அமர்வில் மாணவி வெளியிட்ட தகவல்கள் ஆசிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதுடன், தற்போது இந்த விவகாரம் தொடர்பில் வெளிமாநில இளைஞர்கள் மூவர் கைதானியுள்ளதுடன், மூவர் தலைமறைவாகியும்...
இந்தியாவில் திருமணமான புதுமணத்தம்பதிக்கு இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீடு மற்றும் ரூ 1 லட்சம் பணம் வழங்கப்பட்டுள்ளது அவர்களை உச்ச மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள இர்கோட் கிராமத்தை சேர்ந்த முகமது சல்மான் - சதியா தம்பதிக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. சல்மான் செக்யூரிட்டி பணி செய்து சாதாரண நிலையில் உள்ளார். இந்த நிலையில் மாநில அரசின் வீட்டுத் திட்டத்தின் கீழ் புதுமணத்தம்பதிக்கு இரண்டு படுக்கையறைகள் கொண்ட புதிய வீடு...
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் அருகே பிச்சை எடுக்கும் போது தள்ளு வண்டியைத் திருடியதற்காக காவலில் வைக்கப்பட்டுள்ள நபர், மஹகரகம பமுனுவ பகுதியில் வசிக்கும் கோடீஸ்வரர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடலோர பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பிச்சைக்காரரின் சொகுசு மாடி வீட்டில் தோட்டத்தில் இரு கார்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். வீட்டின் மேல்மாடியை வாடகைக்கு கொடுப்பதன் மூலம் மாத வருமானமாக 30 ஆயிரம் ரூபாவும் பிச்சை எடுப்பதில் தினசரி வருமானமாக 5 ஆயிரம்...
கனடா............ கனடாவில் காணாமல் போன 15 வயது சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவலை ரொரன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர். அதன்படி கிளாரா ஆண்ட்ரூஸ் என்ற 15 வயது சிறுமி Gerrard St East and Main St பகுதியில் காணாமல் போயுள்ளார். கிளாரா காணாமல் போன போது கருப்பு நிற ஷார்ட்ஸ் மற்றும் அதே நிறத்தில் சட்டை அணிந்திருந்தார் என பொலிசார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் கிளாரா ஆண்ட்ரூஸ் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை...
உசைன் போல்ட்........ ஜமைக்காவின் ஓட்டப் பந்தய வீரரான உசைன் போல்ட் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து உசைன் போல்ட் தமது டுவிட்டர் பக்கத்தில் காணொளி பதிவென்றை விடுத்துள்ளார். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைத்துள்ள உசைன் போல்ட் ஜமைக்காவில் வசித்து வருகிறார். இவர் கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வுகளை முன்னெடுத்து வந்தார். எனினும் சில தினங்களுக்கு முன் அவர் தன் 34வது பிறந்த நாள் விழாவை...