Friday, July 3, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
நியூசிலாந்தில் 2019ஆம் ஆண்டு இரு பள்ளிவாசல்களில் 51 பேரை கொன்ற நபர் மற்றொரு பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது அவர் மீதான தீர்ப்பு வழங்கும் வழக்கு விசாரணையில் நேற்று தெரியவந்தது. ப்ரெண்டன் டரன்ட் என்ற அந்தத் தாக்குதல்தாரி பள்ளிவாசல்களுக்கு தீ வைக்கவும், முடியுமான வரை உயிரிழப்புகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டிருந்துள்ளார். அவுஸ்திரேலியரான அவர் தம் மீதான 51 கொலை குற்றச்சாட்டுகள், 40 கொலை முயற்சிகள் மற்றும் ஒரு தீவிரவாத குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில்...
சமந்தா.. பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய வயிறு முழுதும் தெரியும் படியான கவர்ச்சியான சுடிதார் அணிந்த படி...
ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான பிரபல ரவுடி தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் கைவிலங்கோடு மது அருந்தும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. சாந்து குப்தா என்னும் ரவுடி ஒருவர், ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் முன் ஆஜராகி சிறை செல்லும் முன் சாந்து குப்தாக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வெளிவந்த நிலையில்...
பிரித்தானியாவின் பர்மிங்காம் நகரில் 12 மணி நேரத்தில் 6 பேர் கத்திக்குத்து சம்பவத்தில் இலக்கானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பர்மிங்காமில் சனிக்கிழமை காலை 5 மணிக்கு முன்பு சுமார் 15 பேர் கொண்ட கும்பலுக்கு இடையே நடந்த ஒரு மோசமான கைகலப்பில் நான்கு பேர் கத்தியால் குத்தப்பட்டனர். இச்சம்பவத்தை அடுத்து, 6 மணி நேரம் கடந்த நிலையில் ஒரு சிறிய சந்தைக்குள் கத்தியுடன் புகுந்த நபர், பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தகவல்...
கென்யாவில் தனது இறப்பு நிகழ போகும் மாதத்தை இளைஞர் கணித்த நிலையில் அதே மாதத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். Juma Kaiburi Baitairi என்ற 31 வயது இளைஞர் ஆய்வு அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை Juma கொரோனா தொற்றால் உயிரிழந்தார். கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி Juma தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், ஆகஸ்ட் மாதம் எனக்கு மிகவும் நெருக்கமானது....
தமிழகத்தில் இரண்டு குழந்தைகளை தவிக்கவிட்டு இளம் தாயார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவர் மனைவி ஹேமாவதி (24). தம்பதிக்கு இரண்டரை வயது ஆண் குழந்தையும், 5 மாத கைக்குழந்தையும் உள்ளது. இந்நிலையில் நேற்று தனது குழந்தைகளுடன் ஹேமாவதி படுக்கையறையில் இருந்தார். அவர் கணவர் சந்தோஷ்குமார் வெளியில் படுத்திருந்தார். அப்போது திடீரென ஹேமாவதி அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்ட நிலையில் கணவன் சந்தோஷ் குமார் படுக்கை...
தமிழகத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு நாய்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் மற்றும் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரம் பகுதியை சேர்ந்தவர் சகாதேவன். இவருக்கு சொந்தமான குடியிருப்பில் சாந்தி என்ற 50 வயது மதிக்கத்தக்க நபர் வாடகைக்கு தங்கி வந்துள்ளார். சாந்தியின் கணவர் இறந்து விட்ட நிலையில், இவருக்கு துளசி தேவி(23) என்ற மகள் உள்ளார். துளசி...
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் 11 வயது சிறுமி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரியும் அவரது காதலனும் கைதாகியுள்ளனர். கோர்பா பகுதியில் வசித்துவரும் வினாய் ஜகத் மற்றும் அவரது 16 வயது காதலி ஆகியோரே பொலிசாரால் கைதானவர்கள். சனிக்கிழமை பகல் 11 வயது சிறுமி அவரது குடியிருப்பில் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மொபைல்போன் பயன்படுத்துவதில் ஏற்பட்ட தகராறில் சகோதரிடை வெட்டிக்கொன்றதாக 16 வயது பெண் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். இவர்களின் பெற்றோர் வெள்ளிக்கிழமை...
பாகிஸ்தான் கடற்படைக்காக சீனா தயாரித்து வரும் நான்கு அதிநவீன போர்க் கப்பல்களில் முதல் கப்பல் தயாராகிவிட்டதால், அதன் துவக்க விழா சினாவில் நேற்று முன் தினம் நடைபெற்றுள்ளது. சீனாவின் அதிநவீன, டைப் -- 054 பிரிகேட்ஸ் ரக போர் கப்பல்களை வாங்க, அந்நாட்டின் கப்பல் கட்டுமான வர்த்தக நிறுவனத்துடன், கடந்த 2017-ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஒப்பந்தம் போட்டது. இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர், வாங் யி மற்றும் பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர்,...
கிரீஸ் நாட்டிற்கு விடுமுறைக்கு சென்றிருந்த போது கொரோனா வைரஸ் சமூக இடைவெளி விதிகளை மீறியதை காட்டும் புகைப்படம் வெளியானதை அடுத்து நெதர்லாந்து மன்னரும் ராணியும் மன்னிப்பு கோரியுள்ளனர். இணையத்தில் வெளியான புகைப்படம் ஒன்றில், மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்சிமா ஆகியோர் மைக்கோனோஸ் தீவில் ஒரு உணவக உரிமையாளர் என்று கூறப்பட்ட நபருடன் நெருக்கமாக இருப்பதைக் காட்டியது. ஊடகங்களில் வெளியான புகைப்படத்தில் நாங்கள் மிகக் குறைந்த சமூக இடைவெளியை கடைபிடித்திருந்தோம். அந்த நேரத்தில்...