Monday, June 29, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
கடந்த புதன்கிழமையன்று நடந்த மிகப்பெரிய ஹேக்கிங்கை நடத்தியது 21 வயது இளைஞர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த ஹேக்கிங் மூலமாக பல்வேறு முக்கிய பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன. அப்பிரபலங்களின் கணக்கில் க்ரிப்டோ கரன்சி மற்றும் பிட்காயின் மோசடிப்பதிவுகள் பகிரப்பட்டன. இந்த கணக்குகள் மூலமாக ஒரு லிங்க் கொடுக்கப்பட்டு, அந்த லிங்க் வழியாக அனுப்பப்படும் பணம், இரட்டிப்பாக திருப்பிக்கொடுக்கப்படும் என்றும் ட்வீட் செய்யப்பட்டிருந்தது. ஒபாமா, பில்கேட்ஸ், எலன் மாஸ்க், ஜோ பீடன்,...
இந்திய தலைநகர் டெல்லியின் பல பகுதிகளில் பெய்துவரும் கன மழையால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றனர். டெல்லி ஐடிஓ அருகே அண்ணா நகர் பகுதியில் பெருவெள்ளத்தில் சிக்கி பல குடியிருப்புகள் இடிந்து விழுந்துள்ளன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. குடிசைப்பகுதியில் உள்ள பல குடியிருப்புகள் பெருவெள்ளத்தில் சிக்கி இடிந்து விழும் நேரம் பாதிக்கப்பட்ட மக்கள் அலறும் சத்தமும் அந்த வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளது. ஆனால்...
2012ம் ஆண்டு இலங்கை தமிழரான சிவலோகநாதன் தனபாலசிங்கம் மீது சுமத்தப்பட்டுள்ள கொலை வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கியூபெக் நீதிமன்றம் 2019ம் ஆண்டு முடிவு செய்துள்ளது. இதன்படி, சிவலோகநாதன் தனபாலசிங்கம் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட நிலையில், அவர் இல்லாது குறித்த வழக்கு 2019இல் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தனபாலசிங்கத்தின் மனைவி அனுஜா பாஸ்கரன், அவரது வீட்டில் கழுத்தில் கத்திக் குத்துக் காயங்களுடன் 2012ம் ஆண்டு சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்நிலையில், குறித்த கொலை குற்றச்சாட்டுக்கு இடைக்காலத்தடை...
சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் ஆப்கான் அகதி இளைஞரை சரமாரியாக கத்தியால் தாக்கிவிட்டு மாயமான சிறுவனை பொதுமக்களின் தகவலை அடுத்து பொலிசார் கைது செய்துள்ளனர். சூரிச்சின் Utoquai பகுதியில் குறித்த சம்பவம் ஞாயிறு இரவு சுமார் 11.30 மணியளவில் நடந்துள்ளது. அப்போது அந்த வழியாக ரோந்தில் ஈடுபட்டிருந்த பொலிசாரை அணுகிய பொதுமக்கள் உதவ கோரியதுடன், நடந்தவற்றை புகாராக தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், 19 வயதான ஆப்கான் அகதி இளைஞருக்கும் 15 வயதேயான சுவிஸ்...
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரியங்கா தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், விஜே பிரியங்காவும் வீட்டில் இருந்து வருகிறார். பிரியங்கா தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகின்றது. தனது கலகலப்பான பேச்சாலும் நகைச்சுவையாலும் ரசிகர்களைக் கவர்ந்த பிரியங்கா இந்த லாக்டவுனில், கியூட் கணவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி...
பிரித்தானியாவில் பிரைட்டன் பகுதி மருத்துவமனைக்குள் கத்தியால் தாக்குதலுக்கு இலக்கான நபரின் புகைப்படம் மற்றும் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரைட்டனில் உள்ள ராயல் சசெக்ஸ் கவுண்டி மருத்துவமனையில் இன்று காலை சுமார் 8.30 மணியளவில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் தாக்குதலுக்கு இலக்கானவர் 56 வயதான ஜோசப் ஜார்ஜ் என்ற தகவல் புகைப்படத்துடன் தற்போது வெளியாகியுள்ளது. இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான இவர் குறித்த மருத்துவமனையில் உணவு பரிமாறும் பிரிவில் பணியாற்றி வருகிறார்....
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மூன்று நெருங்கிய நண்பர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த பகுதியை ஆய்வுக்கு உட்படுத்திய பொலிசார், இது திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர். புளோரிடா ஏரியில் மீன் பிடிக்க செல்ல முடிவு செய்து வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் ஒரே இடத்தில் ஒன்று கூடியுள்ளனர் நெருங்கிய நண்பர்களான டேமியன் டில்மேன்(23), கெவன் ஸ்பிரிங்ஃபீல்ட்(30), மற்றும் பிராண்டன்...
‘கடாரம்கொண்டான்’ படத்தை தொடர்ந்து விக்ரமின் 58வது படத்தை இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். 7 ஸ்கீரின் ஸ்டுடியோ தயாரித்து வரும் இந்த படத்திற்கு ”கோப்ரா” என பெயரிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இந்த படத்தில் ‘கேஜிஎஃப்’ பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தில் சியான் விக்ரம் 12 கெட்டப்புகளில்...
மிகவும் பிரபல்யமான டிக்டாக் அப்பிளிக்கேஷனின் வசதியை நகல் செய்து வெளியிடும் Snapchat மிகவும் பிரபல்யமான டிக்டாக் வீடியோ அப்பிளிக்கேஷனின் வசதி ஒன்றினை நகல் செய்து தனது அப்பிளிக்கேஷனில் Snapchat வெளியிடவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதன்படி Discover பக்கத்தினை நகல் செய்து வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் டிக் டாக் அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்தும் அனுபவம் இதன் ஊடாகக் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த மாற்றம் தொடர்பான அறிவித்தல் உட்பட மாதிரிப் படங்களும் டுவிட்டர் தளத்தினூடாக வெளியிடப்பட்டுள்ளன. இவ்...
விகாஸ் துபோவின் ரத்த வெறி ரவுடி ராஜ்ஜியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள அதே வேளையில், கான்பூர் மாவட்டத்தில் இருக்கும் மிச்சம் மீதி ரவுடி கும்பலும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்று கான்பூர் எஸ்எஸ்பி தினேஷ்குமார் கூறியுள்ளார். உ.பி. மாநிலம், கான்பூர், பிக்ரு கிராமத்தில் டிஎஸ்பி உள்பட எட்டு பொலிசாரை கொடூரமாகச் சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் கும்பலுக்கு முடிவு கட்டிய தமிழகத்தை சேர்ந்த, கான்பூர் எஸ்எஸ்பி தினேஷ்குமார், ‘இந்து தமிழ்’இணையதளத்துக்கு அளித்த பிரத்யேகப்...