Saturday, June 27, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
வெளிநாட்டிலிருந்து சென்னை வந்த நபர் ஹொட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் இறந்துவிட்டதாக மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார். சந்திரா என்ற பெண் பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், நான் கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்தவர். எனது கணவர் கடந்த 25ஆம் திகதி தேதி சிங்கபூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அன்று முதல் அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை. அன்று இரவு...
தற்போதைய தலைமுறையில் மாறிவரும் உணவு பழக்கத்தினால் உடலில் வைட்டமின் குறைபாடு ஏற்படுகிறது. நம் உடலில் ஏற்படும் ஒரு சில அறிகுறிகளை வைத்தே வைட்டமின் குறைபாட்டை நாம் அறியலாம். வைட்டமின் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சரிசெய்து கொள்ளவில்லை எனில் பிற்காலத்தில் பிறநோய்கள் ஏற்பட காரணமாக அமைந்துவிடும். தற்போது வைட்டமின் குறைபாடு காட்டும் அறிகுறிகள் என்னென்ன, அதற்கான தீர்வு என்ன என்பதையும் பார்ப்போம். நாம் உட்காரும் போதும் , எழுந்திருக்கும் போதும், கைகளை மடக்கும்போதும், தலையை...
ஐ.எஸ். பயங்கரவாத குழு தயாரித்ததாக நம்பப்படும் 1 பில்லியன் யூரோ மதிப்புள்ள போதை மருந்துகளை இத்தாலிய பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் திரட்டப்படும் நிதியால் உலகெங்கிலும் பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுக்க அந்த குழுவினர் திட்டமிட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. சமீபத்தில் இத்தாலியில் 14 மெட்ரிக் டன் ஆம்ஃபிடாமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த போதைப்பொருள் சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் தயாரிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. தென்மேற்கு இத்தாலியில் உள்ள சலேநோ துறைமுகத்தில் 84 மில்லியன்...
தமிழில் பாய்ஸ் திரைப்படத்த்தின் மூலம் அறிமுகமானவர் ஜெனிலியா டிசோசா. குறும்புத்தனமான நடிப்பின் மூலம் பல ரசிகர்களைக் கவர்ந்தவர். அதைத்தொடர்ந்து, விஜயுடன் சச்சின், ஜெயம்ரவியுடன் சந்தோஷ் சுப்பிரமணியம், தனுஷுடன் உத்தமபுத்திரன், மீண்டும் விஜய்யுடன் வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதையடுத்து, பாலிவுட்டில் இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பதை விட்டு விலகினார் ஜெனிலியா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று...
வவுனியா வேப்பங்குளம் பகுதியிலிலுள்ள வீடொன்றிலிருந்து நேற்று (02) காலை இளைஞரின் சடலமொன்றினை வவுனியா பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வீட்டில் இரவு நித்திரைக்கு சென்ற இளைஞனை காலை தாயார் எழுப்பிய போது இளைஞன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து தயார் அயலவர்களுக்கு தகவலை வழங்கியுள்ளார். அயலவர்கள் குறித்த சம்பவத்தினை பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர். வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு அண்மித்த பகுதியைச் சேர்ந்த இராஜேந்திரன் விமலராஜ் (27வயது) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவ...
தமிழகத்தில் கணவனை கூலிப் படை வைத்து கொலை செய்ததை இலங்கையை சேர்ந்த பெண் ஒப்புக் கொண்ட நிலையில், அது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். தஞ்சாவூர் காயிதே மில்லத் நகரைச் சேர்ந்தவர், யூசுப்(45). தாய், தந்தையை இழந்த இவர் குவைத் நாட்டில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்றில், சூப்பர் வைசராக பணியாற்றி வந்தார். அங்கு தன்னைப் போலவே தாய், தந்தையை இழந்து தனியாக வசித்து வந்த, இலங்கையை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க, அசிலா...
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி பொலிசார் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை கைது செய்துள்ளனர். சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடி பொலிசார் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி பொலிசார் 4 காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது செய்யப்ட்டார். இதையடுத்து எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன்,...
இந்தியாவில் திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் கணவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் நிஷா (23). இவருக்கும் விஷ்ணு என்ற இளைஞனுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் நிஷா தனது வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கினார். அந்த சமயத்தில் மகளை பார்க்க அங்கு வந்த நிஷாவின் தந்தை...
சீனாவில் புதிதாக பரவிவரும் காய்ச்சல் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது பிற்காலத்தில் தொற்றுநோயாக மாறக்கூடும் என தொற்றுநோயியல் பிரிவின் தலைமை வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு நேற்று கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “சீன ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி H1N1 காய்ச்சலில் இருந்து வந்த இந்த வைரஸ், பண்ணைகளில் பணிபுரியும் சிலருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் அடையாளம் காணப்பட்ட புதிய...
இந்திய மாநிலம் குஜராத்தில் காதலை முறித்துக் கொண்ட இளம் பெண்ணை முன்னாள் காதலன் கத்தியால் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஜுனகத், தவுலத்பாரா பகுதியில் உள்ள பரபரப்பான காய்கறி சந்தை அருகாமையிலே இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. குறித்த தாக்குதலில் பாவ்னா சோனு கோஸ்வானி என்பவர், சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் பாவ்னாவின் முன்னாள் காதலன் பிரவின் கோஸ்வாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். காதலை முறித்துக் கொண்டு...