Friday, June 26, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள குல்சோகர் என்ற இடத்தில் செவா உல்லர் கிராமத்தில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை அந்த பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் தீவிரவாதிகள்...
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அழகு நிலையங்களுக்குச் செல்வது என்பது முடியாத ஒன்று மட்டுமின்றி ஆபத்தானதும் கூட. அதோடு கெமிக்கல் நிறைந்த பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரிக்கும் போது, அந்த கெமிக்கல்கள் சருமத்தில் உள்ள ஆரோக்கியமான செல்களை அழித்து, சரும அழகை மோசமாக வெளிக்காட்டும். இயற்கை பொருட்களால் ப்ளீச்சிங் செய்யும் போது, எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் சரும நிறத்தை அதிகரிக்கலாம். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை இரவு தூங்கும் முன் செய்தால், சீக்கிரம் வெள்ளையாகலாம். சரி,...
கனடாவில் நள்ளிரவில் சாலையில் சென்ற போது 16 வயது சிறுமி கார் மோதி கொல்லப்பட்ட வழக்கில் கார் ஓட்டுனரை பொலிசார் கைது செய்துள்ளனர். Brampton நகரில் தான் இந்த சம்பவம் கடந்த ஜனவரி மாதம் நடந்தது. நள்ளிரவு 12.20 மணிக்கு Dianna Manan (16) என்ற சிறுமி Gore Road and Queen Street அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. அந்த சமயத்தில்...
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றில் வெற்றி பெற்றதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கள் நுழைய அனுமதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கையின் பெயரை உள்ளடக்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் ஐரோப்பிய சங்கம், உலகின் 54 நாடுகளுக்கு மக்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதுவரையில் உலகின் பாரிய கொரோனா நோயாளர்கள் உள்ள இந்தியா உட்பட அந்த 54 நாடுகள்...
இலங்கையின் தினசரி உப்பு உட்கொள்ளும் அளவு இரு மடங்காக அதிகரித்துள்ளதாக பொரள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ஐந்து கிராம் உப்பு மட்டுமே தேவைப்படுகிறது. இருப்பினும், இன்றைய இலங்கையர்கள் 13 கிராம் உப்பை உட்கொள்கிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சியில் நாடு முழுவதிலுமிருந்து 850 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.. அவர்களின் சிறுநீர் மாதிரிகளில் உள்ள...
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் 3 பிள்ளைகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்த சம்பவத்தில் குடும்ப தகராறு காரணமாக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் 35 வயதான கைலாஸ் பாமர் என்பவரே சனிக்கிழமை பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டவர். இவரின் மனைவி சுமார் ஒன்றரை மாதம் முன்னர் பிரிந்து சென்றுள்ளார். காய்கறி விற்பனை செய்து வரும் கைலாசுக்கு ஊரடங்கால் போதிய வருவாய் இல்லை என்பதாலையே மனைவி...
அவுஸ்திரேலியாவில் குடியிருப்பு ஒன்றில் சொந்த கழிவுகளுக்கு இடையே, அழுகிய நிலையில் நான்கு வயது சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிஸ்பேன் நகரில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்தே வில்லோ டன் என்ற 4 வயது சிறுமியின் சடலம் எலிகள் தின்ற நிலையில் அழுகிய கோலத்தில் மீட்கப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சிறுமியின் தந்தை மார்க் ஜேம்ஸ் டன்(43), மற்றும் வளர்ப்புத்தாய் ஷானன் லே வைட்(43)...
கடந்த ஜனவரி மாதம், 6 சீனர்களை இந்தோனேசியாவிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற விவகாரத்தில் புதிய திருப்பமாக ஆட்கடத்தல் குற்றம் புரிந்ததாக 2 ஆஸ்திரேலியர்கள் கைதாகியுள்ளனர். முன்னதாக, கிழக்கு சீனாவின் Jiangsu மாகாணத்திலிருந்து இந்தோனேசியாவின் பாலி பகுதிக்கு புத்தாண்டு தினத்தன்று வந்த 6 சீனர்கள், திமோர் கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். இதற்காக ஒருவருக்கு தலா 1000 டொலர்கள் என இந்தோனேசிய படகை விலைபேசி சட்டவிரோதமாக...
கர்நாடகா பொலிசாரால் தாக்கப்பட்டு 19 வயது இளைஞன் மரணமடைந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பிஜாப்பூர் மாவட்டத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது, 19 வயதான சாகர் என்ற இளைஞரை பொலிசார் லத்தியால் அடித்ததில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் SSLC கணக்கு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தனது நண்பருக்கு உதவுவதற்காக சாகர் விடைத்தாள்களை தூக்கி எறிந்ததாகவும், பணியில் இருந்த ஆசிரியர் அதை பார்த்து விட்டதால் தப்பிச் செல்ல முயன்ற போது...
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த கணவரின் உடலை அடக்கம் செய்த மனைவி, அதன் பின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபாகர். ரயில்வேயில் வேலை பார்த்து வரும் இவருக்கு, ராமபிரபாவதி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ராம்பிரபாவதி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறது. இந்நிலையில், கடந்த 24-ஆம் தி கணவர் பிரபகர்க்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நேர்மறை முடிவு...