Tamil News
4776 POSTS
0 COMMENTS
அத்துமீறி நுழைந்த ரஷ்ய ராணுவ விமானங்கள்! நடுவானில் வைத்தே தடுத்து நிறுத்திய அமெரிக்க போர் விமானங்கள்!!
Tamil News - 0
அமெரிக்கா - அலாஸ்கா வான்வெளியில் அத்துமீறி பறந்த ரஷ்யாவின் ராணுவ விமானத்தை அமெரிக்காவின் போர் விமானங்கள் இடைநிறுத்தியது.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து வட அமெரிக்கா வான்வெளி பாதுகாப்பு கட்டளையகம் தனது செய்திக் குறிப்பில் கூறுகையில்,
ரஷ்யாவின் விமானங்கள் அமெரிக்கா அல்லது கனடாவின் வான் வெளியில் நுழைய வில்லை. எனினும் அலாஸ்காவின் எல்மென்டார்பில் உள்ள விமான தளத்திலேயே அவற்றை அமெரிக்காவின் எஃப்-22 ரக போர் விமானங்கள் தடுத்து நிறுத்தின...
வவுனியா மதியாமடு பகுதியில் எட்டு கால்களுடன் ஆட்டுக்குட்டியொன்று பிறந்துள்ளது.
இவ்வாறு பிறந்த இவ் ஆட்டுக்குட்டியின் உடல் நிலை ஆரம்பத்தில் நன்றாக காணப்பட்ட போதிலும் பின்னர் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.
இவ் ஆட்டுக்குட்டியினை பார்வையிடுவதற்கு பெருந்மளவிலான மக்கள் வருகை தந்துள்ளனர்.
தமிழர்களின் கொடூரமான மரணம்… நீதி வேண்டும்: ஆதங்கத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய வீரர்கள்!!
Tamil News - 0
தமிழகத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது காட்டப்பட்ட குரூரத்தைப் பற்றி கேள்வி பட்டு கண்கலங்கி விட்டேன் என்று இந்திய வீரர் ஷிகார் தவான் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் பொலிசார் தந்தை, மகனை அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அதன் பின் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மகனும் அடுத்து தந்தையும் 12 மணி நேர இடைவெளியில் உயிரிழந்தனர்
இந்த விவகாரம் தமிழகம் முழுவதும்...
பிரான்சின் மிக பிரபலமான அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான L'Oréal, தனது விளம்பரங்களில் இருந்து 'வெள்ளை' எனும் வார்த்தையை அகற்றியுள்ளது.
உலகம் முழுவதும் தங்களது விளம்பரங்களில் இருந்து இந்த வார்த்தையை அகற்றுவதாக அறிவித்துள்ளது.
சனிக்கிழமை ஜூன் 27 ஆம் திகதி, இன்று தங்களது ஊடக அறிக்கையில் இதனை அறிவித்துள்ளது.
மேலதிக விபரங்கள் அதில் அறிவிக்கவில்லை என்றபோதும், சர்வதேசம் முழுவதும் நிலவும் நிறவெறிக்கு எதிராக இந்த முடிவை தாம் எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது எந்த...
கணவனை பழிவாங்க பேஸ்புக்கில் ஆபாச படங்களை பதிவிட்ட மனைவி! எதற்காக? அதிரவைக்கும் பின்னணி!!
Tamil News - 0
தமிழகத்தில் கணவனை பழிவாங்குவதற்காக மனைவி, சமூகவலைத்தளங்களில் அவரின் புகைப்படத்துடன் வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தை இணைத்து மார்பிங் செய்து பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் பாலக்கரை காஜியார் தெருவைச் சேர்ந்தவர் மோகன் ஜெய்கணேஷ். திருச்சி அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் இவருக்கும், தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வரும் மயிலாடுதுறையைச் சேர்ந்த தாட்சாயினிக்கும் மோகன் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்...
கொரோனா வைரஸ் உலகை உலுக்கி வைத்திருக்கும் சம்பவம் யாரும் எதிர்பாராத ஒன்று தான். அனைத்து மக்களும் தொழில் முடக்கத்தால் பொருளாதார சிக்கலில் உள்ளனர்.
சினிமா தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. இதை நம்பியிருக்கும் பலரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது.
சிலர் மளிகை கடை, சூப்பர் மார்க்கெட், காய்கறி விற்பனை என குடும்ப வாழ்க்கைக்காக தங்களை பிழைப்பை மாற்றியுள்ளனர்.
இந்நிலையில் மராத்தி டிவி நடிகர் ரோஹன் பெட்நேகர் தற்போது மீன் வியாபாரியாக மாறியுள்ளார்.
மன அழுத்தம், தற்கொலை எண்ணம்...
மியான்மரில் இருந்து 27 பேருடன் சீனாவின் யுன்னான் மாகாணத்திற்கு சென்ற படகு ஒன்று மீகாங் ஆற்றில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்ததோடு 6 பேர் மாயமாகியுள்ளனர்.
சீனாவில் உருவாகும் லங்காங் நதி என்று அழைக்கப்படும் மீகாங் நதி மியான்மருக்குள் நுழைவதற்கு முன்பு திபெத் மற்றும் யுன்னான் மாகாணம் வழியாக ஓடி தென்கிழக்கு ஆசியா வழியாக கடலுக்குச் செல்கிறது.
இந்த ஆற்றில் நேற்று மியான்மரை சேர்ந்த படகு ஒன்று சுமார் 27 பயணிகளுடன் சீனாவின்...
செர்ரி- கால்பந்து தொடரில் நட்சத்திர வீரர்களின் பங்களிப்புடன் ஜூவெண்டஸ் அணி அபார வெற்றி!
Tamil News - 0
செர்ரி-ஏ கால்பந்து தொடரின் லெச்ச அணிக்கெதிரான போட்டியில், ஜூவெண்டஸ் அணி அபார வெற்றிபெற்றுள்ளது.
அலையன்ஸ் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்படி இன்று (சனிக்கிழமை) இப்போட்டி நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஜூவெண்டஸ் அணியின் வீரரான போலோ டைபாலா 53ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜூவெண்டஸ் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 62ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி இரண்டாவது கோல் அடித்தார்.
ஜூவெண்டஸ் அணியின் மற்றொரு வீரரான கொன்சாலோ...
சவப்பெட்டிக்குள் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட கஞ்சா! சுங்கவரித்துறையினர் மீட்டனர்..!!
Tamil News - 0
நான்கு சவப்பெட்டிகளுக்குள் கஞ்சா மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், சுங்கவரித்துறையினர் அவற்றை கைப்பற்றியுள்ளனர்.
Doubs நகரை ஊடறுத்துச் செல்லும் A36 நெடுஞ்சாலையில் Miserey-Salines நகர் அருகே வைத்து இதனை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதன்படி, ஸ்பெயினில் இருந்து வாகனம் ஒன்றில் நான்கு சவப்பெட்டிகளை ஏற்றிக்கொண்டு ருமேனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்துள்ளது. சவப்பெட்டிகளுக்குள் உடலங்கள் ஏதும் இருந்திருக்கவில்லை. வீதி கண்காணிப்பில் ஈடுபட்ட பிரெஞ்சு சுங்கவரித்துறையினர் சந்தேகத்தின் பேரின் சவப்பெட்டிகளை உடைத்து சோதனையிட்டுள்ளனர்.
அதன்போது, 60 கிலோ...
கணவன் வீட்டுக்குள் நுழைந்த சில மணி நேரத்தில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட 22 வயது இளம்பெண்!
Tamil News - 0
தமிழகத்தில் கணவனால் இளம்பெண் கழுத்து அறுப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் குழந்தை அனாதையாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் சரவணக்குமார் (24). இவருக்கும் ஜெயலட்சுமி (22) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இருவரும் வேறு, வேறு பட்டாசு ஆலைகளில் கூலி தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனர்.
மாமியார் வீட்டின் அருகில் வாடகைக்கு வீடு பார்த்து குடித்தனம் நடத்தி வந்தனர்.
இந்த தம்பதிக்கு கயல் என்ற 8 மாத...
















