
பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் வீரர் mashrafe mortaza கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் மூலம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பங்களாதேஷில் இதுவரை ஆயிரத்து 400 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.















