பண்ணை விவசாயத்தில் அசத்தும் மகேந்திர சிங் தோனி..!

725

மகேந்திர சிங் தோனி……….

16 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக இருந்த மகேந்திர சிங் தோனி, விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் இப்போது ஆர்கானிக் விவசாயத்தில் கலக்கி வருகிறார்.

ராஞ்சியில் உள்ள 10 ஏக்கர் பண்ணையில் அவர் விளைவுக்கும் காய்கறிகளுக்கு ராஞ்சி சந்தையில் நல்ல கிராக்கி இருக்கிறது. யுஏஇ போன்ற நாடுகளுக்கும் காய்கறி ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ள தோனி, சுவையான ஸ்ட்ராபெரிகளையும் பயிரிட்டு அசத்தி உள்ளார்.

தமது இன்ஸ்டாகிராம் வீடியோவில் பண்ணையில் விளைந்த ஸ்ட்ராபெரிகளை அவர் சுவைக்கும் காட்சி இணையதளத்தில் வைரலாகி உள்ளது.


இப்படியே போனால், விற்பதற்கு ஸ்ட்ராபெரி எதுவும் பண்ணையில் பாக்கி இருக்காது என்ற சுவையான கமென்டையும் தோனி பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by M S Dhoni (@mahi7781)