விமல் வீரவன்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்!!

1112

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையை முரளிதரன், கொழும்பில் பொதுஜன முன்னணி வேட்பாளர் விமல் வீரவன்சவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

வீரவன்சவின் ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக கடந்த வார இறுதியில் கொழும்பில் உள்ள தமிழ் வா்த்தர்களின் ஒன்றுக்கூடல் ஒன்றை முரளிதரன் ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் புறக்கோட்டையை மையமாகக் கொண்ட பல தமிழ் வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.


இதன்போது தமிழ் வர்த்தகர்களின் பிரச்சனைகளுக்கு விமல் வீரவன்சவினால் தீர்வுகள் முன்வைக்கப்பட்டதாக அவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.